12 வருடங்களாக செளதி அரேபியாவில் இருந்து விட்டு (Disclaimer: “வேலை செய்து விட்டு என்று கூறவில்லை!)தற்போது கத்தார் நாட்டில் தோஹாவில் வாசம் செய்கிறேன். என்னதான் “சென்னை” என்று பெயரை மாற்றி அழைத்தாலும், உலகில் எங்கு சென்றாலும் எனது மெட்ராஸ் மாதிரி வருமா?
என்னை பற்றி? பிடித்தது – குழந்தைகளும் அவர்களது சிரிப்பும். பிடிக்காதது – புறம் பேசுவது. படித்தது -பிழைப்பு நடத்துமளவுக்கு மின் பொறியியல். படிக்காதது – உலகளவு. மற்றபடி என்னை பற்றி சொல்ல என்ன இருக்கிறது?
எனக்கு என்னமோ சென்னையே பிடிக்காது, அது மெட்ராஸாகவே இருந்தாலும்!
(((((
எழுதியவர் Geetha Sambasivam நாள் மார்ச் 10, 2009
நேரம் 1:37 பிற்பகல்
அந்த அளவுக்கு மெட்ராஸ் உங்களை திக்குமுக்காட வைத்துவிட்டது என்று சொல்லுங்கள். இனிப்பான லட்டுவை கூட இரண்டுக்கு மேல் சாப்பிட்டால் திகட்டத்தானே செய்யும்?
எழுதியவர் madrasthamizhan நாள் மார்ச் 10, 2009
நேரம் 5:44 பிற்பகல்
நண்பரே, உங்களது சவுதி குறித்த ஆங்கிலப்பதிவு இன்று தான் பார்த்தேன். எங்கே இருக்கிங்க? ரியாத்? எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நன்றி
எழுதியவர் KVR நாள் December 27, 2009
நேரம் 2:36 பிற்பகல்
ராஜா அவர்களே, செளதி அரேபியாவில் பன்னிரண்டு வருடங்களாக வேலை செய்கிறேன். இங்கு உள்ள கட்டுப்பாடுகளால் புனைப்பெயரில் எழுதுகிறேன். எனது மிக நெருங்கிய நண்பர்களுக்கு கூட இதை எழுதுவது நான் தான் என்று தெரியாது. எனது எழுத்துக்களால் நான்கு பேர்களுக்கு நல்லது நடந்தால் அந்த சந்தோஷமே எனக்கு போதும். புரிந்து கொண்டமைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள் நண்பரே.
எழுதியவர் madrasthamizhan நாள் December 27, 2009
நேரம் 7:11 பிற்பகல்
hi , ur blog is really worth reading, i m a dentist , new to kingdom, plz be in tpuch in mail ……@gmail.com (edited to maintain privacy) ,
mail anupina santhosa paduvaen , etho namma ur kaarara santhicha thirupathi kidaikum
எழுதியவர் rohini நாள் ஜனவரி 10, 2010
நேரம் 6:27 பிற்பகல்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரோஹிணி. செளதி அரேபியாவில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. சில கேட்ட விஷயங்களும் உள்ளன. நல்லவைகளை மட்டும் எடுத்து கொண்டு தீயவைகளை தவிர்த்து ஆனந்தமாக வாழ எனது வாழ்த்துக்கள். சில காரணங்களுக்காக எனது மின் அஞ்சலை கொடுக்க விருப்பப்படவில்லை. அடிக்கடி இங்கே வருகை தந்து உற்சாகப்படுத்துங்கள்.
எழுதியவர் madrasthamizhan நாள் ஜனவரி 10, 2010
நேரம் 7:35 பிற்பகல்